Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

மயிலாடுதுறையில் 2-வது புத்தகத் திருவிழா

Published :
-விளம்பரம்-

2nd Book Festival : மயிலாடுதுறையில் 2-வது புத்தகத் திருவிழாவில் பெற்றொர்களையும், மாணவர்களையும் கவர்ந்த தொலைநோக்கி வழியாக கிரகங்களை காண்பது, கோளரங்கம் மூலம் கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமியை காணுதல், ரேபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய அரங்குகள் மாணவர்களையும், பெற்றொர்களையும் மிகவும் கவர்ந்தது.

2nd Book Festival

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி கலந்துகொண்டு “படிப்போம்” “படைப்போம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்தனர்:-

2nd Book Festival

மயிலாடுதுறை மாவட்டத்தின் 2-வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் விழா 4/02/2024 நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்ககம் பள்ளிக்கல்வித்துறை, சார்பில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 3/02/2024 தொடங்கிய புத்தக கண்காட்சி வருகின்ற 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாள் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, பங்கேற்று“படிப்போம்” “படைப்போம்” என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் புத்தகங்களை வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்த கண்காட்சியில் மண்ணின் மைந்தர்களான கவிச்சக்கரவர்த்தி கம்பர், கல்கி, மாயவரம் வேதநாயகம், மூவலூர் ராமாமிர்தம் உள்ளிட்ட மயிலாடுதுறை மண்ணில் பிறந்த அறிஞர்களின் புகழ்பெற்ற புத்தகங்களுக்கான தனி அரங்கம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சாண்டில்யணின் சிவகாமியின் சபதம், கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற என்னற்ற சரித்திர கதைகள் அடங்கிய புத்தகங்கள், பழங்காலத்தில் உள்ள இந்தியா முதல் தற்கால இந்தியா வரை உள்ள அனைத்து புத்தகங்கள், நாவல்கள், பிரபல தலைவர்களின் சரித்திர புத்தகங்கள் என்று தனி அரங்கு, மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொதுஅறிவுத் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில் அதற்கு தேவையான புத்தகங்கள் என 80 அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சி படுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Read Also : சங்கி என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

மேலும், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை விளக்கும் திட்டவிளக்க கண்காட்சி அரங்குகள், காவல்துறை சார்பில் குற்றங்களை தடுக்கும் விழிப்புணர்வு அரங்கு போன்ற பல்வேறு அரங்குகள் பொது மக்களை மிகவும் கவர்ந்தது.

இதில் குறிப்பாக பெற்றோர்கள், மாணவர்களை கவர்ந்த பிகைன்ட் எர்த் சேனல் குழுவினரால் அமைக்கப்பட்ட தொலைநோக்கி வழியாக கிரகங்களை காணுதல், பிர்லா கோளரங்கம் போல் சிறிய அளவிலான கோளரங்கம் மூலம் கிரகங்கள் நட்சத்திரங்கள், சந்திரன், பூமி கோள்கள் காட்டப்பட்டது

மாணவர்கள் பெற்றோர்கள், மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரிசையில் நின்று கண்டு ரசித்தனர். மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் அரங்கில் செயற்கை நுண்ணறிவு கற்பது குறித்த விழிப்புணர்வு அரங்கமும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!