Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

குழந்தைகள் வரைந்த ஓவியம் ஏலத்தில்விட்டு புற்று நோயாளிகளுக்கு உதவி

Published :
-விளம்பரம்-

Children’s paintings help cancer patients : கல்லூரி மாணவிகளுக்கு போட்டியாக கரகாட்டம், காவடி, புலிவேசம் என உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடிய பள்ளி குழந்தைகள் ; 50 வகையான நிறங்களில் பானைகள், கமர்கட்டு, பல்லிமிட்டாய், தேன் மிட்டாய் என 90 கிட்ஸ்களின் பாரம்பரியத்தை கண்முன் நிறுத்திய குழந்தைகள்.

மேலும் இதில் வரும் வருவாயை நலிவடைந்த விவசாயிகளுக்கு வேஷ்டி, சேலையும் மற்றும் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு புற்று நோயாளிகளுக்கு அனுப்பப்பட்டது பற்றிய செய்தி தொகுப்பு.

Children’s paintings help cancer patients

Children's paintings help cancer patients
Children’s paintings help cancer patients

தமிழகம் முழுவதும் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்வி நிறுவனங்களில் கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்தும், நடனமாடியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு போட்டி கொடுக்கும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாக்கோவில் கிராமத்தில் இருக்கும் சர் ஐசக் நியூட்டன் பள்ளியில் மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவில் தமிழர்களின் அடையாளங்களை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் நடைபெற்ற பொங்கல் விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் பேபி துவக்கி வைத்தார். விழாவில் குழந்தைகளால் பொங்கல் சந்தை நடத்தப்பட்டு, 90 கிட்ஸ்களின் மிட்டாய் வகைகள் விற்பனை செய்யப்பட்டது.

Read Also : மயிலாடுதுறை நகராட்சியில் பொங்கல் விழா

இலந்தை மிட்டாய், ஐஸ்மிட்டாய், குச்சி மிட்டாய்,குருவி ரொட்டி,கடலை மிட்டாய்,தேன் மிட்டாய், தேங்காய் பர்பி, போன்ற மிட்டாய்களை குழந்தைகள் மகிழ்ச்சியோடு வாங்கி உண்டு மகிழ்ந்தனர். மேலும் மிட்டாய் விற்பனை செய்யப்படும் தொகை மற்றும் மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பெற்றோர்களுக்கு ஏலம் விட்டு அதனால் வரும் வருவாயை 10 வயதுக்கு உட்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மேலும் அருகில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு வேட்டி சேலை போன்ற பொங்கல் தொகுப்பை, வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளுக்கு நேரடியாக சென்று வழங்கினர்.

பள்ளிகளில் குழந்தைகள் படிக்கும் பருவத்திலே அவர்களை சமூக விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட ஊக்கமளிக்கிற பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது மேலும் பார்வையாளர்கள் கண்களை கவரக்கூடிய வகையில் சந்திராயன் ராக்கெட் பானை போன்ற 50 க்கும் மேற்பட்ட வண்ணமயமான பானைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!