Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

நாகை அருகே கீழ்வேளூரில் அரசு பள்ளி மாணவர்களின் கலர் பலூன் சிறார் புத்தக வெளியீட்டு விழா

Published :
-விளம்பரம்-

Color Balloon Children’s Book Launch : நாகை அருகே கீழ்வேளூரில் அரசு பள்ளி மாணவர்களின் கலர் பலூன் சிறார் புத்தக வெளியீட்டு விழா; பள்ளி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நடைப்பெற்றது; புத்தகத்தை பள்ளி மாணவர்கள் வெளியிட அதை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றுக் கொண்டார்

Color Balloon Children's Book Launch
Color Balloon Children’s Book Launch

அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலே முதல் முறையாக குருக்கத்தி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் கலர் பலூன் சிறார் இதழை அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கதை, கவிதை, ஓவியம் மற்றும் ஜோக் என முழுக்க, முழுக்க மாணவர்களின் கை வண்ணத்தில் 2 மாதத்திற்கு 1 முறை அச்சிட்டு புத்தகம் வெளி வர உள்ளது.

Color Balloon Children’s Book Launch

முதல் இதழ் பதிப்பு வெளியிட்டு விழா கீழ்வேளூர் ப்ரைம் தனியார் கல்லூரியில் நடைப்பெற்றது. புத்தகத்தில் படைப்பாற்றல் செய்த மாணவர்கள் புத்தகத்தை வெளியிட அந்த இதழை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பெற்றுக் கொண்டார். மாவட்ட ஆட்சியர் படைப்பாற்றலை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

தொடர்ந்து ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் பேசும்போது குழந்தைகள் உண்மையாக என்ன எழுதுகிறார்களோ இந்த சமூகம் அதை ஏற்றுக்கொள்கிறதோ இல்லையோ வித்தியாசமாக எதுவாக இருந்தாலும் அதில் இடம்பெற வேண்டும் குறிப்பாக சமுதாயத்திற்கு மாறுபட்ட முறையில் குழந்தைகள் சொல்லுவது அதாவது ஆசிரியர்களுக்கு தோன்றும் அவன் அதிகப்படியாக நடந்து கொள்கிறான் என நினைக்கும் அனைத்தும் இந்த கலர் பலூனில் இடம்பெற வேண்டும் என்பதை என்னுடைய வேண்டுகோள் என கூறினார்.

அதை தொடர்ந்து மாணவ, மாணவிகளின் ஆடல், பாடல், கதைசொல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பால சாகித்ய்யகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மு.முருகேஷ் கலந்துகொண்டு குழந்தை இலக்கியம் குறித்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆட்சியரோடு மாணவ மாணவிகள் செல்பி எடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்புத் தன்மை, படைப்பு தன்மையை ஊக்குவிக்க முழுக்க முழுக்க பள்ளி மாணவர்களின் படைப்புகளை கொண்டே புத்தகத்தை வெளி கொண்டு வந்துள்ள முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!