Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

திருவாவடுதுறையில் பிரமாண்டமான இஸ்லாமிய கண்காட்சி

Published :
-விளம்பரம்-

திருவாவடுதுறையில் பிரமாண்டமான இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஐனுல் உலூம் மக்தப் மதரஸா &அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய 2ஆம் ஆண்டு பிரமாண்டமான இஸ்லாமிய கண்காட்சி அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது,இந்த கண்காட்சியில் சவுதி அரேபியாவில் அமைந்துள்ள மெக்கா மதினா பலஸ்தீனத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸ் ஆகிய புண்ணிய ஸ்தலங்களில் மாதிரி வடிவமைப்புகள் போன்று கண்காட்சியில் வைக்கப்பட்டது.

Islamic exhibition Thiruvaduthurai
Islamic exhibition Thiruvaduthurai

Islamic exhibition Thiruvaduthurai

பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது மேலும் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ள 114 சூராக்களின் வரலாறுகளை நினைவு படுத்தும் வகையில், மாணவர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தது. அதை பார்த்தவர்கள் வரலாறுகளின் பக்கம் கவனத்தை திருப்பும் விதமாக இருந்தது.

இந்த கண்காட்சிக்கு சுற்று வட்டார ஊர்களில் இருந்து எல்லா சமுதாயத்தைச் சார்ந்தவர்களும், தி.பண்டாரவாடை, திருமங்கலம், கதிராமங்கலம், நரசிங்கன் பேட்டை,மக்தப் மதரஸா மாணவ மாணவியர் என ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.

பின்னர் பார்வையாளர்கள் மாணவ மாணவியரின் திறமைகளை கண்டு வியந்து பாராட்டியதோடு அனைத்து ஊர்களிலும் இதுமாதிரியான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் மாணவர்களுடைய கவனங்களை சிந்தனைகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதறாமல் பாதுகாப்பதற்கும் இது மாதிரி நிகழ்வுகள் பாதுகாப்பையும் கொடுக்கும் என்று வந்திருந்த பலர்கள் கூறியது சிந்திக்க வைத்தது.

இதையும் படிங்க : காரசாரமான சுவையில் பேச்சலர்ஸ் கார சட்னி இதுமாதிரி அரைச்சா ருசியில மயங்கிடுவீங்க! ருசியோ ருசி !!!

இந்த கண்காட்சிக்கு நடுவராக கிளியனூர் ஜாமியா ரவ்ழத்துஸ் ஸாலிஹாத் மகளிர் அரபி கல்லூரி முதல்வரும், கிளியனூர் பேராசிரியர் தைய்யான் முஹம்மது மஹ்தி, தி.பண்டாரவாடை இமாம் அப்துல் ரஹ்மான்.மிஸ்பாஹி. கிளியனூர் பேராசிரியர் ஜூபைர் அலி மஹ்தி, எலந்தங்குடி தலைமை இமாம் மான ஃபஹ்ருத்தீன் ஃபைஜி உள்ளிட்டோர் வந்திருந்து சிறப்பான முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் பங்கேற்று கொண்ட எல்லோருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது இந்த விழாவின் ஏற்பாடுகளை திருவாவடுதுறை முஹ்யித்தீன் ஆண்டவர் பள்ளிவாசல் முத்துவல்லி நாட்டாமை பஞ்சாயத்தார்கள் ஹைருன் நிஷா பெண்கள் அரபிக் கல்லூரி தலைவர் செயலாளர் நிர்வாக பெருமக்கள் ஐனுல் உலும் மதரஸாவின் நிர்வாகிகள் சிறப்பான முறையில் செய்திருந்தனர். இந்த விழாவின் முடிவில் ஐனுல் உலூம் மக்தப் மதரஸா ஆசிரியர் ஷேக் முஹம்மது ரஹீமீ நன்றிகூறினார்.

இதையும் படிங்க : தாலி கயிறு மாற்ற சிறந்த மாதம் மற்றும் நாள் 2024

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!