Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

பிளாஸ்டிக் குப்பைகளை கொட்ட வந்த வாகனங்களை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

Published :
-விளம்பரம்-

Plastic Waste Vechicle : மயிலாடுதுறை அருகே 35 அடி ஆழ பள்ளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணல்களை கொட்டி தூர்த்து பிளாட் போடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் வகையில் அந்த பள்ளத்தை நீர் ஆதாரமாக உருவாக்க கோரிக்கை விடுத்தும் குப்பை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்தும் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Plastic Waste Vechicle
Plastic Waste Vechicle

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள வயலில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 35 அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் மயிலாடுதுறை நகராட்சி மற்றும் பல்வேறு நபர்கள் குப்பைகளை கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் குப்பைகளை கொட்டக்கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்..

Plastic Waste Vechicle

இந்நிலையில் அந்த இடத்தை வாங்கிய செந்தில் என்பவர் குப்பைகள் கொட்டப்பட்ட பள்ளத்தை சமன் செய்து பிளாக் போடுவதற்காக பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணல்களை நீடூர் பகுதியில் இருந்து டிராக்டர் லாரிகள் மூலம் வந்து பள்ளத்தில் கொட்டி சமன் செய்ய முற்பட்டார் அப்போது அப்பகுதி கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாகனங்களை சிறை பிடித்துள்ளனர் 35 அடி ஆழ பள்ளத்தை மூடி பிளாட் போட்டு விற்பனை செய்தால் அந்த இடத்தை வாங்கி வீடு கட்டினால் ஆபத்து ஏற்படும் என்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை கொட்டுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்றும் குட்டை போல் உள்ள இடத்தை நீராதாரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read Also : சீர்காழி குட் சம்மரிட்டன் பள்ளியில் விளையாட்டு விழா

சம்பவம் அறிந்து வந்த குத்தாலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பள்ளத்தில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் கலந்த மணலை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். வருவாய்த் துறையினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்…

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!