Welcome to V Tamil Tv ..... VTamilTv.com என்பது பொதுமக்களுக்கு பயன் உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல், அழகு குறிப்பு, உடல் நலம் ஆரோக்கியம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.

தாலி கயிறு மாற்ற சிறந்த மாதம் மற்றும் நாள் 2024

Published :
-விளம்பரம்-

Thali Kayiru Matrum Matham : அனைத்து பெண்களுக்கும் வணக்கம். பாரம்பரிய முறைப்படி2024 ஆம் ஆண்டில் தாலி கயிறு மாற்ற சிறந்த மாதம் மற்றும் நாள் குறித்து தெரிந்துகொள்வோம் வாங்க. தாலியானது புனிதமான ஒன்று என கருதப்படுகிறது. பொதுவாக, தாலி மாற்றுவதற்காக என ஒரு முறை இருக்கிறது. அவ்வாறே பெண்கள் தாலியை மாற்ற வேண்டும். அதாவது, தாலியை மாற்றுவதற்கு சிறந்த மாதம் மற்றும் உகந்த தினம் இருக்கிறது. அதற்கேற்ற மாதத்தில் தான் பெண்கள் தாலியை மாற்ற வேண்டும்.

Thali Kayiru Matrum Matham
Thali Kayiru Matrum Matham

பெண்கள் ஒவ்வொவொருவரும், ஒவ்வொரு முறைப்படி தாலியை மாற்றுவார்கள். நிறைய பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று தாலியை மாற்றுவார்கள். ஆடிப்பெருக்கு நீங்கலாக மற்ற எந்த தினத்தில் தாலி மாற்றுவது என பல பெண்களுக்கு குழப்பமாக இருக்கும். அதிலும், இப்போது இருக்கும் ஒரு சில பெண்களுக்கு தாலி மாற்றும் முறை பற்றி தெரிவதில்லை. ஆகவே, பெண்களுக்கு பயன் பெரும் வகையில் தாலி கயிறு மாற்ற ஏற்ற மாதம் மற்றும் நாள் 2024 கொடுத்திருக்கிறோம்.

தாலி கயிறு மாற்ற சிறந்த மாதம் 2024: Thali Kayiru Matrum Matham

  • சித்திரை
  • வைகாசி
  • ஆடி
  • ஆவணி
  • ஐப்பசி
  • கார்த்திகை
  • மாசி

சித்திரை:

சித்திரை மாதத்தில் வரும் மீனாட்சி திருக்கல்யாணம் நன்னாளில் தாலியை மாற்றினால் மிகவும் நல்லது.

வைகாசி:

வைகாசி மாதத்தில் வரக்கூடிய நல்ல கிழமையில் தாலி கயிற்றினை மாற்றலாம்.

ஆடி:

ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு நன்னாளில் பெண்கள் தாலியை மாற்றுவது மிகவும் சிறந்தது.

ஆவணி:

ஆவணி மாதத்தில் வரக்கூடிய முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி, மேல்நோக்கு நாள், அமிர்த் யோகம், சித்த யோகம் ஆகிய தினங்களில் தாலியை மாற்றலாம்.

ஐப்பசி:

ஐப்பசி மாதத்தில் வருக்கின்ற முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் ஆகிய நாட்களில் தாலியை மாற்றலாம்.

கார்த்திகை:

கார்த்திகை மாதத்தில் வரும் முகூர்த்த நாள், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி,மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் ஆகிய நாட்களில் தாலியை மாற்றலாம்.

மாசி:

மாசி மாதத்தில் வருகின்ற முகூர்த்த தினம், பௌர்ணமி, வளர்பிறை, பஞ்சமி, மற்றும் தசமி, மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் உள்ளிட்ட நாட்களில் தாலியை மாற்றலாம்.

தாலி மாற்ற உகந்த கிழமை:

  • திங்கள்
  • செவ்வாய்
  • வியாழன்

தாலி மாற்றுவதற்கு திங்கள், செவ்வாய் மற்றும் வியாழனில் ஏற்ற கிழமையாக இருக்கிறது.

இதையும் படிங்க : ட்ரௌட் மீன் என்றால் என்ன? அதில் உள்ள சத்துக்கள் மற்றும் பயன்கள்

தாலி மாற்றும் முறை:

தாலி கயிற்றை ஆண்டிற்கு 2 முறையாவது கட்டாயம் மாற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

தாலிக்கயிறு மாற்றுவதற்கு முன்பு குளித்துவிட்டு பூஜை செய்யும் அறையில் விளக்கேற்றி, கிழக்கு பார்த்தபடி உட்கார்ந்து மாற்றவேண்டும்.

தாலி மாற்றுவதற்கு முன் திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ உள்ளிட்டவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பாதியில் எழுந்து செல்லக்கூடாது.

கணவர், சுமங்கலியாக உள்ள பெண்கள் அல்லது மாமியார் இவர்களில் யாராவது ஒருவர் அருகில் இருக்கும்போது தாலி மாற்ற வேண்டும்.

தாலியை முறையாக மாற்றி, தாலிக்கு மஞ்சள், குங்குமம், பூ வைக்க வேண்டும். அதன் பிறகு, கடவுளை வேண்டிக்கொண்டு மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

தாலி கயிற்றை மாற்றி கொண்ட பின், சுமங்கலி பெண்களுக்கு மங்களகரமான பொருட்களான மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பூ மற்றும் 5 கண்ணாடி வளையல்கள் கொடுப்பது சிறந்தது.

இதையும் படிங்க : சுவையாக எலுமிச்சை சாதம் செய்வது எப்படி ?

WhatsApp Channel Join Now
Youtube Channel Subscribe Now
Facebook Page Follow Now
Instagram Channel Join Now
-விளம்பரம்-
RELATED ARTICLES
-விளம்பரம்-

சமீபத்திய செய்திகள்

Index
உடலில் இது போன்ற அறிகுறிகள் தெரியுதா? – இதுதான் காரணம்! டீ, காஃபியை எப்போது எப்படி குடிக்கலாம்? வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுடைய வாழ்க்கை ரகசியம் சுட்டெரிக்கும் வெயிலை தணிக்கும் சூப்பர் குளிர் பானங்கள் இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் பாருங்க! தேவையற்ற கொழுப்பை குறைப்பதற்கு பூண்டை இப்படி சாப்பிடுங்க! குளிர்ந்த பால் குடிப்பதால் இத்தனை நன்மைகள் உண்டா? முருங்கை காய் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்! வெள்ளை நிற உணவுகள் வேண்டாம்..அதற்கு பதிலாக இதை எடுத்துக்கோங்க! குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் செய்யுங்க பருப்பில் வண்டு வராமல் இருக்க.. இதை try பண்ணுங்க! சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி ப்ரியா பற்றி உங்களுக்கு தெரியுமா? புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சைத்ரா ரெட்டி? ஒரு கைப்பிடி அளவு தர்ப்பூசணி விதைகள் தினமும் சாப்பிட்டால் உண்டாகும் நன்மைகள் இனிப்பு உணவுகள் சாப்பிடும் ஆசையை குறைக்கும் அருமையான ஜூஸ்கள் கொரியர்களை போல கண்ணாடி சருமம் பெற டிப்ஸ்! சிறகடிக்க ஆசை சீரியல் எடுத்த புதிய பரிமாணம்.. இந்திய அளவில் ட்ரெண்ட் ! வீட்டில் பணத்தை தங்கவைக்கும் 5 பொருட்கள் மஞ்சள் பாலின் ஆரோக்கிய நற்குணங்கள்! வணிகத்தில் வெற்றி பெற்று முன்னேறி வரும் டாப் 10 இந்திய பெண்மணிகள்..!!