Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

கோடைகாலங்களில் கிராம்பை உட்கொள்வதால் என்னவாகும் ? அவசியமாக தெரிந்துகொள்ளுங்கள் !

கோடைகாலம் வந்துவிட்டாலே உடல் சூடாகிவிடும் அதனால் இந்த உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்று பலரும் எண்ணுவார்கள். ஆனால் இந்தக்கால ஆயூர்வேதம் மற்றும் நவீன விஞ்சான முறையில்…

V Tamil News Advertisement
For Advertisement
Click Here

கோடைகாலம் வந்துவிட்டாலே உடல் சூடாகிவிடும் அதனால் இந்த உடல் சூட்டை தணிக்க வேண்டும் என்று பலரும் எண்ணுவார்கள். ஆனால் இந்தக்கால ஆயூர்வேதம் மற்றும் நவீன விஞ்சான முறையில் பயன்படுத்துவதால் கோடைவெப்பத்தில் கிராம்பு ஆரோக்கியமான நன்மைகளை வழங்கும்.

What Happens If You Eat Cloves During Summer

கிராம்பு மழைக்காலத்திலோ அல்லது குளிர்காலத்திலோ மட்டுமே பயன்படுத்தக்கூடிய மசாலாப் பொருள் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே உடல் சூடாகி விடும் அதனால், கிராம்பினை உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ஆயுர்வேதம் அதேபோல நவீன கால அறிவியலின்படி கிராம்பை சரியான முறையில் உபயோகித்தால், கோடைக்காலத்தில் அற்புதமான ஆரோக்கியம் உள்ள நன்மைகளை வழங்கும். நம் உடலில் உள்ள வெப்பத்தை சமநிலைப்படுத்த கிராம்பு எவ்வாறு பயன்படுகிறது என்பதை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

What Happens If You Eat Cloves During Summer
What Happens If You Eat Cloves During Summer

ஆயுர்வேத ஆராட்சியாளர் சிவகுமார் பாண்டே அவர்களின் கூற்றுப்படி, ஆயுர்வேதத்தில் கிராம்பை
‘தேவபுஷ்பம்’ என்று சொல்லப்படுகிறது. அதில் வெப்பத்தன்மை கொண்ட போதிலும், உடலில் இருக்கும் பித்தம்,கபம் மற்றும் இரத்த தோஷங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் கிராம்புக்கு இருக்கிறது. அதை சரியான விகிதத்தில் உட்கொண்டால் உடலில் உஷ்ணத்தை அதிகரிப்பதில்லை, ஆனால் உடலில் உள் உறுப்புகளைக் குளிரச்செய்து சமநிலையைப் பராமரிக்கிறது.

[related_stories]

கோடை காலத்தில் வெய்யிலின் தாக்கத்தினால் உண்டாகும் தோல் எரிச்சல், தலைச்சுற்றல் மற்றும் தண்ணீர் தாகம் போன்றவை உண்டாகும். கிராம்புஉட்கொள்வதால் உடலில் நீர் தேக்கத்தை சீராக்க பயன்படுகிறது. அது வாயில் உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கச்செய்கிறது அதன் காரணமாக அடிக்கடி ஏற்படும் வாய் வறட்சி அல்லது தாகம் போன்றவைகளை குறைக்கின்றன. இரவு முழுவதும் 1 அல்லது 2 கிராம்புகளை தண்ணீரில் ஊறவைத்து, காலைநேரத்தில் அந்தநீரைக் குடிப்பதால் அன்றைய தினம் உடல் புத்துணர்ச்சியுடனும் மற்றும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

கண் ஆரோக்கியத்திற்கு கிராம்பு மிகவும் நல்லது என்று ஒரு சிலருக்கு மட்டும் தெரியும். அது இரத்தத்தைச் சுத்திகரிக்க பயன்படுவதால், கோடை வெப்பத்தால் கண்களில் உண்டாகும் எரிச்சல் மற்றும் சோர்வு இவற்றை குறைக்கின்றன. இந்த கிராம்பினை குறைந்த அளவு உட்கொள்வது கண் பார்வைதிறனை மேம்படுத்தும் அதோடு கண்களையும் பிரகாசமாக்கவும் செய்கிறது.

What Happens If You Eat Cloves During Summer
What Happens If You Eat Cloves During Summer

சூரியனின் கடுமையான வெப்பத்தால், உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாக உடலில் இருந்து வெளியேறி, நீரிழப்பை உண்டாக்குகிறது. இது மிகவும் கடுமையான சோர்வை ஏற்படுத்துகிறது. கிராம்பு உட்கொள்வதால் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது அந்த பிரச்சனைகளையும் குறைக்கிறது.வெல்லத்துடன் கிராம்பை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு உடனடி சக்தியை அளித்து உள் வறட்சிஉண்டாவதையும் குறைக்கிறது.

கோடை காலத்தில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக, வாய் மற்றும் வயிற்றில் இருக்கும் பாக்டீரியாக்கள் வேகமாக அதிகரிக்கிறது. கிராம்பில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்கின்றன. உணவுக்குசாப்பிட்டபின்பு ஒரு கிராம்பை மெல்லுவது உங்கள் சுவாசத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் மற்றும் வாய் சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது. ஆகவே தான் கிராம்பினை பல பற்பசைகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

What Happens If You Eat Cloves During Summer
What Happens If You Eat Cloves During Summer

நமது செரிமான அமைப்பு கோடை காலத்தில் சற்று பலவீனமடைகிறது. நாம் அதிகமாக உணவு உட்கொள்ளும் போது, ​​அது வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சனைகளை உண்டாக்குகிறது. கிராம்பு நம் உடலில் இருக்கும் செரிமானத் தீயைத் தூண்ட செய்து உணவை எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது. கிராம்பில் ‘யூஜெனால்’ என்று சொல்லக்கூடிய வேதிச் சேர்மம் இருக்கிறது. இது உடலில் உண்டாகும் அழற்சியைக் குறைக்கிறது அதுமட்டுமின்றி உடலை எல்லா நேரங்களிலும் ஆரோக்கியமாக வைத்திருக்க பயன்படுகிறது.

கோடைக்காலத்தில் கிராம்பு சூடாக இருக்கும் என்பதால் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டியதில்லை. கிராம்பை இரவு முழுவதும் நீரில் அல்லது வெல்லத்தில் ஊறவிட்டு உட்கொள்வதால் கோடைகாலத்தில் முழுமையான ஆரோக்கியத்தைப் பெறலாம். ஆனால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஒரு சிறப்பு மருத்துவரிடம் சென்று பார்ப்பது நல்லது.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க