ரசாயனம் கலந்து பழுக்கவைத்துள்ள மாம்பழங்களை ஈசியாக கண்டறிந்து, பாதுகாப்பாக தேர்ந்தெடுப்பது பற்றி உணவுத்துறை முக்கிய அறிவுரை கூறியுள்ளது.
ARE SHINY MANGOES DANGEROUS
கோடைக்காலம் ஆரம்பித்தவுடன் சந்தைகளில் மாம்பழங்களின் வரவு அதிகமாகிறது. அல்போன்சா, இமாம் பசந்த்மற்றும் மல்கோவா போன்ற பல்வேறு விதமாக விற்பனைக்கு வந்தாலும், அவற்றில்எந்த வகை இயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்வதற்கு பொதுமக்களுக்கு குழப்பம் உண்டாகிறது. இதனை எளிதில் கண்டறியும் வழிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெளிவாக விளக்குகின்றனர். பொதுமக்கள் ஆரோக்கியமான நல்ல மாம்பழங்களைத் வாங்குவதற்கு சில முக்கிய குறிப்புகள் இங்கு பார்க்கலாம்.

நிறம் மற்றும் தோற்றம்
செயற்கையாக கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியான மஞ்சள் கலரில் பளப்பளப்பாக இருக்கும். ஆனால், இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களில் மஞ்சள் மற்றும் பச்சை கலந்த நிறமாக இருக்கும். மேலும், பழத்தின் தோல் பகுதி சுருக்கமில்லாமல் மென்மையாகவும், சற்று தடிமானகவும் இருக்க வேண்டும்.

நறுமணம்
நல்ல மாம்பழங்களில் காம்புப் பகுதியில் நன்கு மனமாக இருக்கும். செயற்கையான ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் இனிய நறுமணம் இருக்காது; ஆனால் மருந்து வாசனை அல்லது ரசாயன வாசனை இருக்கும்.
தொடு உணர்வு (Firmness)
மாம்பழத்தை லேசாக அழுத்திப் பார்த்தால் மென்மையாக இருக்க வேண்டும். வெளிப்பகுதியில் மஞ்சள் கலராக இருந்தாலும், உள்ளே கடினமாக இருந்தால் அது செயற்கையாக பழுத்தது.

தண்ணீர் சோதனை (Bucket Test)
ஒரு வாளி தண்ணீரில் மாம்பழங்களை போட்டு சோதிக்கலாம். தண்ணீரில் மூழ்கினால் தானாக இயற்கையாகப் பழுத்த நல்ல பழம். அந்த பழம் தண்ணீரில் மிதந்தால் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. மேலும், மாம்பழங்களை வாங்கிவந்தவுடன் சாப்பிடாமல், அந்த பழங்களை 1 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து, பிறகு அதன் தோலை நீக்கி சாப்பிடுவதுமிகவும் நல்லது. இது உடல் வெப்பத்தை குறைக்கவும், தோலில் உள்ள ரசாயனப் படிவங்களை நீக்கவும்பயன்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
🥭 மாம்பழம் வாங்குபவரா நீங்கள்? – முக்கிய FAQ
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க
